தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் மஸ்ஜித் ஸலாம் கிளை பொதுக்குழு கூட்டம் ஸலாம் மர்க்கஸில் நேற்று நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழுவில் ஸலாம் கிளையின் புதிய தலைவராக ரம்ஜான் அலி, செயலாளர் பத்ரு அலி, பொருளாளர் பாசுதீன், துணைத் தலைவர் பீர் முகமது, து.செயலாளர் அசன், மருத்துவ அணி இம்ரான் முகம்மது, தொண்டர் அணி சேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.