பண்ணாரி அருகே குட்டியுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த காட்டு யானை

பண்ணாரி அருகே குட்டியுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த காட்டு யானை

Update: 2024-10-14 05:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பண்ணாரி அருகே குட்டியுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த காட்டு யானை சத்தியமங்கலம் அருகே பண்ணாரி வனப்பகுதியில் யானைகள் மான்கள் கரடிகள் சிறுத்தை புலிகள் காட்டெருமைகள் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன இதில் யானை உணவு தேடி வனப்பகுதியொட்டிய ரோட்டில் சுற்றித் திரிகின்றன அப்போது அந்த வழியாக வரும் லாரிகளை வழிமறித்து அதில் கரும்புகள் இருக்கிறதா எனத் தேடி தின்று வருகின்றன இந்த நிலையில் பண்ணாரி வனபகுதியில் யானை தனது குட்டியுடன் நேற்று மதியம் 1:30 மணி அளவில் வெளியேறியது பின்னர் அந்த காட்டு யானை குட்டியுடன் பண்ணாரி அருகே உள்ள ரோட்டுக்கு வந்து தொடர்ந்து அந்த வழியாக லாரிகள் ஏதும் கரும்பு ஏற்றி வருகிறதா? என அங்கேயே சுற்றி சுற்றி வந்தது ஆனால் எந்த லாரிகள் எதுவும் கரும்பு ஏற்றி வரவில்லை இதனால் குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது இதன் காரணமாக சுமார் 15 நிமிடம் பண்ணாரி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து வனத்துறையினர் கூறும் போது இது போல் ரோட்டில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது மேலும் அருகிலேயே சென்று செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது இதெல்லாம் ஆபத்தை விளை விக்கக் கூடியதாகும் என்றனர்

Similar News