உடுமலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர தலைமை சார்பில் தமிழக வெற்றி கழகம் ஆலோசனைக் கூட்டம் உடுமலை நகர தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர் தெற்கு மாவட்டத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்து தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.அப்போது விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெறும் முதல் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாநாட்டிற்கு தொண்டர்கள் எவ்வாறு வர வேண்டும் அரசின் சட்ட திட்டங்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் திருமலை , திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஹரிஹரன், உடுமலை நகர நிர்வாகிகள் காஜா, பிரபு ,சந்திரன், பிரேம்குமார், சையது இப்ராஹிம் மற்றும் உடுமலை ,குடிமங்கலம், உடுமலை தெற்கு ஒன்றியம், மற்றும் குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் ,குடிமங்கலம் ஒன்றிய மகளிர் அணி, உடுமலை தெற்கு பகுதி மகளிர் அணி மற்றும் உடுமலை நகர ஓன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காமாட்சி அம்மன் கோவில் , விநாயகர் கோவில், சிவன் கோவிலில் விழுப்புரத்தில் நடைபெறும் மாநாடு சிறப்பாக நடைப்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன .பின்னர் செய்தியாளர்களிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி கே சங்கர் பேசும் பொழுது.. உடுமலையில் விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது மாநாட்டுக்கு கூட்டம் அதிகமாக வரும் நிலையில் எவ்வாறு அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது மேலும் தற்சமயம் தமிழக மக்களுக்காக வாழும் நல்ல தலைவராக விஜய் உள்ளார். மாற்றுக் கட்சி சார்ந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய் கட்சிக்கு வர தயாராக உள்ளனர் மேலும் வருகின்ற 2026 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஆவது உறுதி என பேசினார்.