உடுமலையில் உலகப் புகழ்பெற்ற தகவல் தொடர்பு ஜோட்டா - ஜோட்டி நிகழ்வு நடைபெற்றது மாணவர்கள் உற்சாகம்
அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஹேம் ரோடியோ எனும் அமெச்சூர் வானொலி உரிமம் பெற்ற ஆர்.ஜி.எம்.மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணிய மாணவர்களின் ஜோட்டா -ஜோட்டா ஜோடி நிகழ்ச்சியை ஆர்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திருமதி நந்தினி நவீந்திரன் துவக்கி வைத்தார் பள்ளியின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பள்ளியின் முதல்வர் சகுந்தலா மணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் மேலும் உடுமலை ஹேம் ரேடியோ ஆபரேட்டர்கள் உதவியுடன் விழா வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது .ஹோம் ரேடியோ வாயிலாக நாடுகளை கடந்து சாரண சாரணிய மாணவர்கள் அனைவரும் செய்திகள் மற்றும் கருத்துக்களை எளிதாகவும் மிக சிறப்பாகவும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் .இந்த நிகழ்வில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, சோழமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, உட்பட 14க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 150 க்கு மேற்பட்ட மாணவர் மாணவர்கள் கலந்து கொண்டு பிற நாடுகளில் சாரண சாரணிய மாணவர்களுடன் உடுமலை அமெச்சூர் வானொலி மூலமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் மேலும் ஹேம் ரேடியோ உதவியுடன் தங்களுடைய ஐயங்களை கேட்டு கொண்டனர்.மேலும் சாரண சாரணிய மாணவர்கள் சவாலான விளையாட்டு போட்டிகளான கம்பு மாற்றி பிடித்தல்,கூட்டு கம்பிகளில் நுழைந்து வருதல் .இருபக்க உறுதிப்பட்டை தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் உற்சாகத்துடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்