உடுமலையில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் தண்ணீர் புகுந்தது
பொதுமக்கள் கடும் ஆவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் நேற்று மாலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்தது இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது இந்த நிலையில் விஜி ராவ் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் மற்றும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கடும் அவை அடைந்தனர் மேலும் ஓரு வீட்டில் கழிவுநீர் புகுந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் கடும் இன்னலுக்கு ஆளானார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது .விஜிராவ் நகர் பகுதியில் நுழைவு வாயில் பகுதியில் ஓடை ஒன்று செல்கின்றது இந்த ஓடை முறையாக தூர்வாரபடாத காரணத்தால் நேற்று இரவு பெய்த கனமழையால் தண்ணீர் அதிக அளவு வந்த நிலையில் ஒடையில் உடைப்பு ஏற்பட்டு தற்பொழுது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் ஓடையை தூர்வார வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் ஊழியர்கள் அலட்சியம் காரணமாக தற்பொழுது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர்