உடுமலைக்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு

நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2024-10-22 09:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்ன வீரன்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஸ் இன்று கும்பாபிஷேக விழாவுக்கு கலந்து கொள்வதற்காக உடுமலைக்கு வந்தார். அப்போது திருப்பூர் புறநகர் அதிமுக சார்பில் ஆட்டம் பாட்டத்துடனும் மலர் தூவியும் வரவேற்பு கொடுத்தனர் .பின்னர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .பின்னர் சின்ன வீரன் பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயக பெருமானை சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது.. தமிழக அரசு வருகின்ற மழை அளவைப் பொறுத்து கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள படாத காரணத்தால் ஏராளமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுகவினர் ஒன்று சேர்ந்தால் திமுக உட்பட யாரும் எங்களை வெல்ல முடியாது மழைநீர் ஒரே நாளில் அகற்றப்பட்டது. என துணை முதல்வர் பேட்டி கொடுத்தது குறித்து கேட்டபோது.. துணை முதல்வர் செய்தித்தாள்களையே பார்ப்பதில்லை என கிண்டலாக பதில் அளித்தார்.மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் டி டி காமராஜ் ,மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யு ஜி கே சற்குணசாமி ,உடுமலை நகர செயலாளர் லயன் நடராஜன் , உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன் ,உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் போடிபட்டி ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News