உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதம்பம்பட்டியில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை சட்டமன்ற உறுப்பினரான ராதாகிருஷ்ணன் பேசும்பொழுது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பல்வேறு நலத்திட்டங்களால் பயன்பட்டனர் இந்த நிலையில் தற்பொழுது இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.எனவே மிக விரைவில் அதிமுக ஆட்சியில் அமைய வேண்டும் என 53 வது ஆண்டு தொடக்க விழாவில் அனைவரும் சபதம் ஏற்போம் அப்போதுதான் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ,ஆடு, மாடுகள் ,வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணினி, இலவச சைக்கிள் இலவச மிக்சி கிரைண்டர் அனைவருக்கும் கிடைக்கும் என பேசினார். முன்னாள் அமைச்சர் கழகக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் வேலுச்சாமி பேசும் பொழுது.. அதிமுகவின் திட்டங்களால் அனைத்து கட்சியினரும் பலன் பெற்றனர் மேலும் எல்லா சலுகையும் பெற்றுவிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து விட்டார்கள் .வசதி படைத்தவர்கள் ஏழை எளியோர் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை திட்டம் முன்னாள் முதல்வர் அம்மாவால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தற்பொழுது பெயரளவு செய்து வருகின்றனர் எனவே 2026 ஆம் ஆண்டு அதிமுக அமையப் பெறுவது யாராலும் தடுக்க முடியாது என பேசினார் பொதுக்கூட்டத்தில் விருகல்பட்டி ஊராட்சியில் இருந்து திமுக உறுப்பினர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர் .மேலும் பொது மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆனந்தன் தலைமைக் கழக பேச்சாளர் ராஜகோபால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமசிவம் கரைபுதூர் நடராஜன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.