மாநில கால்பந்து போட்டிக்கு உடுமலை என். வி.மெட்ரிக் பள்ளி அணி தகுதி

பல்வேறு தரப்பினர் பாராட்டு

Update: 2024-10-23 12:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடுமலை: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட மாண வியர், 17 வயது பிரிவி னருக்கான கால்பந்து போட்டி, கணியாம் பூண்டி, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாவட்டத்தில் ஏழு குறுமையங்களில், குறு மைய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பெற்று, ஏழு அணிகள் பங்கேற்றன. காலிறுதி, அரையிறுதி போட்டி களை தொடர்ந்து, மாலையில் இறுதி போட்டி நடந்தது. உடுமலை குறு மையத்தை சேர்ந்த என். வி மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்று மதுரையில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாவட்ட அளவில் முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் ஜூனியர் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றது.வெற்றி பெற்ற அணிக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Similar News