திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தாராபுரம் ரோடு 5-வது வார்டு துவக்கப்பள்ளி பின்புறம் கடந்த சில தினங்களாகவே பட்டப் பகலில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது இது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர் . மேலும் தற்பொழுது நூற்றுக்கு மேற்பட்டோர் இப்பகுதியில் குவிந்துள்ளனர் .தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.