உடுமலையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
பக்தர்கள் சிறப்பு வழிபாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிவி கோவில் வீதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு பிரசன்னா விநாயகர் கோவிலில் ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது இங்கு இன்று ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால் தயிர் பன்னீர் புஷ்பம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்