உடுமலையில் பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

நிர்வாகிகள் உற்சாகம்

Update: 2024-11-07 15:27 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று பத்மஸ்ரீ கமலஹாசன் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் உடுமலையில் உள்ள யுனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் முதியோர் இல்லத்தில் கமலஹாசன் பிறந்தநாளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டு அனைவருக்கும் உடுமலை மக்கள் நீதி மையம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது நிகழ்வில் மாவட்ட செயலாளர் குரு, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த் ,மாவட்ட பொருளாளர் சிவகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிக்குமார், நற்பணி மாவட்ட செயலாளர்கள் சந்தோஷ் , பழனிச்சாமி, நற்பணி இயக்க துணை மாவட்ட செயலாளர் சிவநாரயணவேல் ,நற்பணி இயக்க நகர செயலாளர் கன்னிமுத்து , ஒன்றிய செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் திரவையும் கார்த்தி தினேஷ் கண்ணன் பாலகிருஷ்ணன் வாசு மணிகண்ட பிரபு ஜனார்த்தனன் மெட்ராஸ் ராஜேந்திர சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News