புதுகையில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம்

நிகழ்வுகள்

Update: 2024-11-11 07:33 GMT
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தபால் துறை சார்பில் மாநில அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் ஏராளமான ஓய்வூதியர்கள் தங்களது ஆதார், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து விரல் ரேகை மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்தனர்.

Similar News