தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நெல்லை,தென்காசி மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.