நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயிலில் விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் என நிறுத்தங்கள் குறைவு என்பதோடு பயண நேரமும் மிகக் குறைவு என்பதால் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.இதனால் இந்த ரயிலுக்காக காத்திருப்போர் பட்டியலும் நீண்டுள்ளது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை 16 ஆக உயர்த்திட தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.