தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களை வருகின்ற நவம்பர் 22ஆம் தேதிக்குள் நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கலாம. விண்ணப்பங்களை tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.