கரூரில் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வெல்டிங் பணியின் போது திடீர் தீ விபத்து. தொழிலாளி உயிரிழப்பு.
கரூரில் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வெல்டிங் பணியின் போது திடீர் தீ விபத்து. தொழிலாளி உயிரிழப்பு.
கரூரில் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வெல்டிங் பணியின் போது திடீர் தீ விபத்து. தொழிலாளி உயிரிழப்பு. கரூரை அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் ராயல் கோச் என்ற தனியார் கூண்டு கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கூண்டு கட்டும் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் தொழிலாளர்கள் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதிதாக பேருந்து கூண்டு கட்டி முடிக்கப்பட்ட பேருந்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, கரூர் மாவட்டம், செல்லாண்டிபட்டி அருகே குமாரபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற வெல்டர்,வெல்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென தீ பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்,அந்த பேருந்தில் வேலை பார்த்த அனைவரும் அவசரமாக வெளியேறினர். ஆனால், ரவிச்சந்திரன் பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டார். இதனிடையே தீ மளமளவென பிடித்து பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தின் கதவின் அருகே இருந்த ரவிச்சந்திரன் உடல் முழுவதுமாக எரிந்து போனது. இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல்துறையினர் ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.