அறந்தாங்கி மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்து அரசர் ஆலய கொடியேற்று விழா கோலாகலமாக தொடங்கியது. பெருவிழாவானது நேற்று முதல் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்து வருகிறது. இதனை கிறிஸ்தவ பெருமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.