வேலம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. பெண் கைது.
வேலம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. பெண் கைது.
வேலம்பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. பெண் கைது. கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நவம்பர் 17ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி ரேவதி 55 என்பவர் கடையில், தடை செய்யப்பட்ட புகயிலை பொருட்கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த கடையில் ஆய்வு செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 12 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும்,விற்பனை செய்த ரேவதியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவரை காவல் நிலை பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.