தஞ்சாவூரில் பணியில் இருந்த ஆசிரியர் ரமணி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் பணியில் இருந்த ஆசிரியர் ரமணி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் பணியில் இருந்த ஆசிரியர் ரமணி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி பள்ளியில் பாடம் நடத்தி கொண்டு இருந்த போது, இன்று குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிராக பல்வேறு ஆசிரியர் சங்கங்களும், அமைப்புகளும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்கள் முன்பு, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசு பள்ளி ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அரசு பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ரமணி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்தனர். ஆசிரியரை கொலை செய்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்.