தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கல்லூரி மாணவர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற புத்தாக்க கண்டுப்பிடிப்பு கண்காட்சியில் ஹேக்கத்தான் திட்டத்தில் முதல் பரிசு வென்ற நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் நிறைந்த மனதோடு நன்றி தெரிவித்தனர்.
புத்தாக்க தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 மாணவ குழுக்களுக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20 மாணவக் குழுக்களுக்கும் என 80 புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளை பெறும் கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தொழிலை தொடங்கி நடத்திட வேண்டும் என்றால் தொழில் முனைவு பயிற்சியும் வழிக்காட்டுதலும் மிகவும் முக்கியமானது. இதற்காகவே 2001- ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - EDII தொடங்கப்பட்டது. EDII நிறுவனம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் முனைவு பயிற்சியுடன் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவிகளையும் அளித்து வருகிறது. கடந்த 23 ஆண்டுகளாக EDII நிறுவனம் இந்த பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞான உலகில் உலக நாடுகளுடன் நாம் போட்டி போடுவதற்கு புதிய புதிய கண்டுப்பிடிப்புகள் மிகவும் அவசியம். அத்தகைய புதிய கண்டுடிப்பிடிப்புகளை உருவாக்கிட தமிழ்நாட்டில் உள்ள புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர்கள், இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து, தேவையான நிதி உதவிகளை வழங்கிட முதல்வர் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹேக்கத்தான் திட்டத்தில் முதல் பரிசு வென்ற நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தெரிவித்தாவது,என் பெயர் கோபிநாத். நான் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் டெக்னாலஜி கல்லூரியில் துகில் நுட்பியல் பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறேன். எங்களது அணியின் பெயர் De-Mulch. நானும் எனது வகுப்பு மாணவர்களாகிய கோகுலவாசன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் ஒன்றிணைந்து துகில் நுட்பியல் பேராசிரியர் முனைவர் நா.சுகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கும் பாலிமர் அடிப்படையிலான தழைக்கூளம் விவசாயத்திற்காக செய்துள்ளோம். எங்களது திட்டமானது மக்காத பிளாஸ்டிக் தாள்களை மக்கும் பொருட்களாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மற்றுவது. இத்திட்டம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன் வெள்ளை மாசுபாட்டைக் குறைப்பதாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு ஹைப்ரிட் இன்ஜினியரிங் தயாரிப்பை உருவாக்குவது ஆகும். இந்நிகழ்ச்சியில் தே.ராம்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், த.வடிவேல், உதவி மக்கள் தொடர்பு அலுவலர், (செய்தி)