நாமக்கல்: பழைய அரசு மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ! நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கோரிக்கை

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் கோரிக்கை மனு அளித்தார்

Update: 2024-11-20 14:14 GMT
நாமக்கல் மோகனூர் சாலையில் பழமை வாய்ந்த அரசு தலைமை மருத்துவமனை இருந்தது. இந்த மருத்துவமனைக்கு சுகாதார நிறுவனம் தேசிய தரச்சான்று வழங்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் தரமாக இருந்ததால் பவித்திம், காரவள்ளி, காளப்பநாய்க்கன்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திருச்சி மாவட்டம், தொட்டியம், மேய்க்கல்நாய்க்கன்பட்டி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சென்றனர்.தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலக பின்புறம், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழைய மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாகமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் கோரிக்கை மனு அளித்தார்.இந்த சந்திப்பில் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆர்எஸ்ஆர். மணி, சென்னை மாவட்ட செயலாளர் இசை பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News