கரூர் மாநகரில் சாயக் கழிவு நீரா? பொதுமக்கள் அச்சம்.அதிகாரிகள் திடீர் ஆய்வு.
கரூர் மாநகரில் சாயக் கழிவு நீரா? பொதுமக்கள் அச்சம்.அதிகாரிகள் திடீர் ஆய்வு.
கரூர் மாநகரில் சாயக் கழிவு நீரா? பொதுமக்கள் அச்சம்.அதிகாரிகள் திடீர் ஆய்வு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் மழைநீர் வடிகாலில் பிங்க் நிறத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்ணா நகர் பகுதியில் செயல்படும் குழந்தைகள் மையத்துக்கு அருகில் உள்ள பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக இந்த பிங்க் நிற கழிவு நீர் அதிகப்படியாக வெளியேறி வருகிறது. இப்பகுதியில் வெளியேறும் இந்த நீரானது, மழைநீர் வடிகால்கள் வழியாக நேராக சின்ன ஆண்டாங்கோவில், ராஜவாய்க்காலில் கலந்து அமராவதி ஆற்றில் கலந்து மாசடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பிங்க் நிறத்தில் வெளியேறும் இந்த கழிவு நீர் சாயக்கழிவு நீர் என அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் பாதாள சாக்கடை இணைப்புகள் செல்லும் வழித்தடங்களில் உள்ள மூடிகளை அப்புறப்படுத்தி உடைத்து எடுத்து ஆய்வில் ஈடுபட்டுனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார், இப்பகுதியில் அனுமதி பெற்ற சாய ஆலைகள் இல்லை எனவும், அனுமதி இன்றி ஒருவேளை இயங்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து வெளியேறி வரும் பிங்க் நிற கழிவுநீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டதில் 600 முதல் 850 வரை நீரில் டிடிசி காரத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த ஆய்வு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.