தமிழக மின்வாரியத்திற்கும், அதானி நிறுவனத்திற்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

தமிழக மின்வாரியத்திற்கும், அதானி நிறுவனத்திற்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

Update: 2024-11-21 11:20 GMT
தமிழக மின்வாரியத்திற்கும், அதானி நிறுவனத்திற்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது காமராஜ் மார்க்கெட் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி,ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் அதானி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்த விதமான நேரடி தொடர்பும் இல்லை எனவும், தமிழக மின்வாரியத்திற்கு தேவையான 1500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசின்,சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது எனவும், இந்தியா முழுவதும் இந்த நிறுவனம் மின் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து, தேவைப்படும் மாநிலத்திற்கு இந்த நிறுவனம் மின்சாரத்தை வழங்கி வருவதாகவும், அதன் அடிப்படையில் தமிழக மின்சார வாரியத்திற்கு தேவையான மின்சாரத்தை இந்த நிறுவனத்தில் கொள்முதல் செய்வதாகவும், தமிழக மின்வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்த விதமான நேரடி தொடர்பு இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட் 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்த நிலையில், தற்போது அதே மின்சாரத்தை இரண்டு ரூபாய் 61 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என தெரிவித்தார். .

Similar News