சேறும் சகதியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

குருவிகுளத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-11-22 09:03 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் மானூர் கூட்டுக் குடிநீர் குழாய்க்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழி தோண்டும் பணி நடைபெற்று தற்போது பணிகள் முடிவடைந்தது. சாலைகளை சீரமைக்காமல் சேறும் சகதியுமாக நிறைந்து காணப்படுகிறது.இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் செல்வதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீரும் வற்றாமல் சேறும் சகதி அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இரவில் விபத்துகளும் நடைபெற்று வருகிறது.இதில் செல்லும் முக்கிய பிரதான சாலையாக உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News