நெல்லையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அந்த வகையில் சீவலப்பேரி பகுதிகளில் தேங்கிய மழை நீரில் தற்பொழுது பாசி ஏற்பட்டு பச்சை நிறத்தில் கொசுக்கள் புழுக்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே இதற்கு சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.