விராலிமலை வீராலூர் சாலையில் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு 70 வயது மதிக்கத்தக்க ஆண் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வீராலூர் விஏஓ ஞானசகாத்தியா அளித்த புகாரின் பேரில் விராலிமலை எஸ்.எஸ்.ஐ முருகன் விசாரணை செய்து வருகிறார்.