வாசுதேவநல்லூா் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
ஆடு மேய்க்கும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே கூடலூரில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் வெள்ளத்துரை (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா் பெரியகுளம் அய்யனாா் கோயில் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மனைவி மாரித்தாய், உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினா். இந்நிலையில் இவர் நேற்று மாலை பெரியகுளத்தில் அவரது சடலம் மிதப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தோா் தெரிவித்தனராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.