மாணிக்கப்புரத்தில் மனைவி இறந்ததால் மதுவுக்கு அடிமையானவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

மாணிக்கப்புரத்தில் மனைவி இறந்ததால் மதுவுக்கு அடிமையானவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2024-11-24 12:21 GMT
மாணிக்கப்புரத்தில் மனைவி இறந்ததால் மதுவுக்கு அடிமையானவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி வயது 50. இவர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இதே கிராமத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 5- வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி திடீரென காலமாகிவிட்டார். அவரது மனைவி இறந்த தூக்கத்தை மறக்க முடியாத சிவசாமி மது போதைக்கு அடிமையானார். நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால், மது போதைக்கு அடிமையாகி விட்டதாக வருத்தம் அடைந்த சிவசாமி நவம்பர் 23ஆம் தேதி காலை 9 மணி அளவில், அருகிலுள்ள சாந்தி என்பவர் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சிவசாமியின் மகள் சர்மிளா வயது 22 என்பவர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிவசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News