தொக்குபட்டியில் சட்டவிரோத மது விற்பனை. 30 மது பாட்டில்கள் பறிமுதல்.
தொக்குபட்டியில் சட்டவிரோத மது விற்பனை. 30 மது பாட்டில்கள் பறிமுதல்.
தொக்குபட்டியில் சட்டவிரோத மது விற்பனை. 30 மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நவம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் ராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள இந்தியன் கேஸ் குடோன் அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம், புதூர், தொக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சங்கர் வயது 55 என்பவரை கைது செய்து,அவர் விற்பனைக்கு வைத்திருந்த 20 குவாட்டர் பிராந்தி பாட்டில்களையும், 10 பீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், சங்கர் மீது வழக்கு பதிவு செய்த சின்ன தாராபுரம் காவல் துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.