ராசிபுரம் அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்...
ராசிபுரம் அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்...
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கிவிட்டனர்.இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிமுக,திமுக, தேமுதிக ,அமமுக,தவெக,பாமக மற்றும் பல்வேறு கட்சியினர் சார்பில் வாக்காளர்கள் பட்டியல் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது, முகவரி மாற்றம் செய்வது போன்ற பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல மறைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தி ஆன நபர்களை புதிதாக சேர்த்தல்,இறந்தவர்கள் பட்டியலை நீக்குதல் போன்ற பணிகளில் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் ஈடுபட்டு வருகின்றனர்..