இந்திய தொழில் கூட்டமைப்பான சி ஐ ஐ சார்பில் கரூர் விஷன் 2030 கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இந்திய தொழில் கூட்டமைப்பான சி ஐ ஐ சார்பில் கரூர் விஷன் 2030 கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இந்திய தொழில் கூட்டமைப்பான சி ஐ ஐ சார்பில் கரூர் விஷன் 2030 கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் சிஐஐ அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணி தலைமையில் கரூர் விஷன் 2030 என்ற தலைப்பில் ஒத்துழைப்பு கருத்து அரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் டெக்ஸ்டைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன், வெங்கடேசன், முன்னாள் தலைவர் ராஜா எம் சண்முகம், நடிகரும் எழுத்தருமான மகேஷ், சி ஐ ஐ துணைத் தலைவர் பிரபு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். மேலும், இந்த கூட்டத்தில் தற்போது டெக்ஸ்டைல் துறையில் 10 முதல் 15 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி நடைபெற்று வரும் சூழலில் அதனை 25 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்தும், மற்ற தொழில் துறையினர் வரும் ஆண்டுகளில் டெக்ஸ்டைல் துறையினருடன் சேர்ந்து மொத்தம் 50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு அரசின் தரப்பில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது குறித்து தமிழக முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவதாக தெரிவித்தார்.