கட்டிபாளையத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் உயிரிழப்பு.
கட்டிபாளையத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் உயிரிழப்பு.
கட்டிபாளையத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், நஞ்சை புகலூர், திருக்காடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார் வயது 31 குரல் கடந்த 2020 ஆம் ஆண்டு மோபினா இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கிடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் மோகன் குமார் மது போதைக்கு அடிமையானார் இந்நிலையில், நவம்பர் 22 ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், அவரது வீட்டில் மோகன் குமார் சுயநினைவு இன்றி கிடந்துள்ளார். இதனை அறிந்த மோகன் குமாரின் தந்தை சுப்பிரமணி வயது 55 என்பவர், தனது மகனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர், உயிரிழந்த மோகன் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவகிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.