மக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.9.37 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-11-25 12:44 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 579 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.4.14 இலட்சம் மதிப்பீட்டில் வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்புக் கடன், தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) ன் கீழ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், 1 நபருக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையாக ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காவக்காரன்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி மு.சோலைமுத்து காதொலி கருவி வழங்ககோரி அளித்த மனுவின் அடிப்படையில் ரூ.5,560/- மதிப்பில் காதொலி கருவியை உடனடியாக வழங்கினார். மேலும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.430/- மதிப்பில் மடக்கு குச்சி, 1 மாற்றுத்திறனாளி ரூ.5,560/- மதிப்பில் காதொலி கருவிகள், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.17,000/- மதிப்பில் இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கு உதவித்தொகை என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.9.37 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News