அறையப்பட்டி காளியம்மன் கோயிலில் திருட்டு

கோயிலில் திருட்டு;

Update: 2024-12-16 14:50 GMT
ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தையொட்டி ஒலிபெருக்கி கட்டி பக்தி பாடல்கள் போடுவது வழக்கம். இந்த நிலையில், கோயிலில் புதிதாக வைக்கப்பட்ட ஒலிபெருக்கி ஆம்பிளிபயரை இன்று கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.19 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News