ஆலங்குடியில் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
ஆலங்குடியில் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்;
ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை, காமராஜர்சிலை, ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் அதிகமான நாய்கள் சுற்றி திரிகின்றன.பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிவதால், ரோடுகளில் செல்வோரை விரட்டிச் சென்று கடிக்கிறது. எனவே, தெருக்களில் சுற்றிதிரியும் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.