சங்கரன்கோவில் திமுக சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர்

திமுக சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர்

Update: 2024-12-19 09:19 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பரி. பவுல் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு திமுக முன்னாள் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 102 வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் இல.சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ். சங்கரன்கோவில் நகர மன்ற தலைவி உமா மகேஸ்வரி மற்றும் ராஜேந்திரன், புனிதா, அண்ணாமலை, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Similar News