தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.சிவசங்கரை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-12-19 11:01 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.அரிகரன் தலைமையில் ஆட்டோ தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆட்டோ தொழிலை பாதிக்கும் டூவீலர் பைக் டாக்ஸியை தடை செய்ய முடியாது என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.சிவசங்கரனை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க மையத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News