தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு இன்று நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-19 12:55 GMT
கூட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் சி.முத்து அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொ.பாரதி அவர்கள் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என வணிகர்களை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை மற்றும் பல்பொருள் வணிகர்கள் சங்கம், நாமக்கல் நகர எலெக்ட்ரிகல் வணிகர்கள் சங்கம், மாவட்ட செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன், மர வியாபாரிகள் & அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள், பேரமைப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News