செங்கத்தில் எல்.இ.டி தெரு விளக்கு பொருத்தும் பணி.
செங்கம் பேரூராட்சி பகுதியில்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு ராஜவீதி தெருவில் இன்று பழைய மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதியதாக எல்.இ.டி தெருவிளக்கு பொருத்தப்பட்டது. மேலும் செங்கம் நகர பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழைய மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருவதாக பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷாஅவர்கள் தெரிவித்தார்.