விருத்தாசலத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அமித்ஷாவை கண்டித்து நடந்தது
கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரை பற்றி நாடாளுமன்றத்தில் அவதூறாகப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், இளைஞரணி நகர அமைப்பாளர் பொன் கணேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் அன்சர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் ராமு அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர் இமயம், மாவட்ட இளைஞர் நலன் மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், முன்னாள் எம் எல் ஏ கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். தொடர்ந்து அம்பேத்கரை பற்றி தவறாக பேசிய அமித்ஷாவை கண்டித்தும், மன்னிப்பு கேட்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர் அணி அருள்குமார், ஆட்டோ பாண்டியன், பழனிச்சாமி, மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி, குரு சரஸ்வதி, ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், தங்க அன்பழகன், தளபதி, கார்த்திகேயன், சுந்தரமூர்த்தி, பூதாமூர் முத்து, செந்தில்குமார், மாரிமுத்து, பூந்தோட்டம் ராஜா, வடிவேல் முருகன், சோழன் சம்சுதீன், சங்கர், ரகுபதி, மெக்கானிக் சரவணன், புருஷோத்தமன், விஜி , ரமேஷ், துரை கோவிந்தசாமி, கஸ்பா பாலு, விஜயன், விக்கி, கார்த்தி, பாலாஜி, வீரமணி, பாலா, தேவராஜ், பூவராகன், சுரேஷ், ராதா, சாரங்கபாணி, ஆரோக்கிய செல்வி மங்கையர்க்கரசி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.