விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவதூறாக பேசிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நடந்தது
அம்பேத்கரை அவதூறாக பேசிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் எம்.கே விஜயகுமார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் சரவணன், ரவிச்சந்திரன், செல்வ பாரதி, காசி விஸ்வநாதன், அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சந்திரசேகர், அம்பேத்கர், புஷ்பதேவன், குமரகுரு, மணிகண்டராஜன், அசோக்குமார், செந்தில், மணிகண்டன், மோகன்ராஜ், முனுசாமி, வினோத், சீனு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அமித்ஷாவை கண்டித்தும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.