இந்திய குடியரசு கட்சி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் தவறாக விமர்சித்ததாக கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நடந்தது.
நாடாளுமன்றத்தில் தவறாக விமர்சித்ததாக கூறி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.கடலூர் கிழக்கு முன்னாள் மாவட்ட தலைவர் பால. வீரவேல், மாவட்ட பொருளாளர் கணேசன், கிழக்கு மாவட்ட பொருப்பாளர் வேலாயுதம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அலிபாபு, விருத்தாச்சலம் நகர தலைவர் ராஜேந்திரன், அம்பேத்கர், பவுண்டேஷன் செயலாளர் கலாமணி, துணைச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.