தேசிய அளவிலான பேஸ்பால் போட்டியில் அணியாபுரம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு!
தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்
திருச்சியில் பேஸ் பால் தமிழ்நாடு அணிக்காக தெரிவு போட்டி நடைபெற்றது இதில் அரசு மேல்நிலைப்பள்ளி நாமக்கல் மாவட்டம்,அணியாபுரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார்கள் அவர்கள் விவரம் வருமாறு.. 14 வயது பிரிவில் செ. அக்ஷயா, ச. பிரியதர்ஷினி, ச. பவஸ்ரீ, ந.கிஷோர், சி.தீபக் , சி.திக்ஷன் ஆகியோர் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 17 வயது பிரிவில் மு.சரவணா, ச.நனிஷ்கா, ப. கனிஷ்கா ஆகியோர் டெல்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் 19 வயது பிரிவில் ரா.ஆனந்த், த. தேன்மொழி, ச. சுகுணா ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ம.பெரியசாமி , கே. செல்வராஜ் ஆகியோர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செ.புனிதா மற்றும் இருபால் ஆசிரியர்களும் , பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்