சேதமடைந்த சிறும்பாலங்களை நேரில் சென்று ஆய்வு.
செங்கம் சுற்று வட்டார பகுதியில்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்று வட்டாரப்பகுதிகளான நீப்பத்துறை, பக்கிரி பாளையம், அரட்டவாடி, தாழையூத்து, காஞ்சி பகுதியில் சேதமடைந்த சிறுபாலங்களை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஞானவேல் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செங்கம் உட்கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி உதவி பொறியாளர் ப்ரீத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.