பசங்களா இருந்தாலும் எப்படி கதவு இல்லாமல் பாத்ரூம் போவாங்க என அடுக்கடுக்காக விடுதி காப்பாளரிடம் கேள்வி எழுப்பிய ஆட்சியர்..
பசங்களா இருந்தாலும் எப்படி கதவு இல்லாமல் பாத்ரூம் போவாங்க என அடுக்கடுக்காக விடுதி காப்பாளரிடம் கேள்வி எழுப்பிய ஆட்சியர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உமா ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இரவு சுமார் 11.மணி அளவில் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் திருவள்ளூர் அரசு கலைக் கல்லூரியின் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் மாவட்ட ஆட்சியர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் இருந்த மாணவர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.அப்போது மாணவர்கள் முறையாக விடுதியில் மின்விசிறி இயங்கவில்லை எனவும் விளையாட்டு உபகரணங்கள் இல்லை எனவும் கோரிக்கை வைத்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தான் விளையாட்டு உபகரணங்கள் நாளை வாங்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.மேலும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். விடுதியின் கழிவறைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு கழிவறையில் உள்ள அறைகளுக்கு கதவுகள் இல்லாததால் கண்டு அதிர்ச்சி அடைந்து விடுதிக் காப்பாளரிடம் கேட்டார் . அப்போது ஆட்சியர் பசங்களாக இருந்தாலும் எப்படி கதவு இல்லாமல் குளிப்பார்கள், கழிவறைக்கு செல்வார்கள் என அடுக் அடுக்காக கேள்வி எழுப்பினார்.அதனை தொடர்ந்து விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் தான் அனைத்து வசதிகலும் நாளை ஏற்படுத்தி தருவதாக கூறிவிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் உங்கள் பெற்றோர்கள் நிலையறிந்து சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்..