ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
குமாரபாளையத்தில் சட்ட மாமேதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.;
நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை அம்பேத்காரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உள்ள பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் நகரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றிய அமைச்சர் அமீத்ஷாவை கண்டித்தும் அமித் ஷா பதவி விலகக் கோரியும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு நகர கழக பொறுப்பாளர்கள் பொறுப்பாளர்கள் இளைஞர் அணி மகளிர் அணி மற்றும் சார்பு பணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்