காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
சட்ட மேதை அம்பேத்கரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர். டிச.20- மாநிலங்களவையில், சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நகரத் தலைவர்கள் ஜெயங்கொண்டம் அறிவழகன், அரியலூர் மா.மு.சிவகுமார், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜசேகரன், வட்டாரத் தலைவர்கள் கண்ணன், சக்திவேல், கர்ணன், பாலகிருஷ்ன், கங்காதுரை, சரவணன், மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.