கந்தம்பாளையம் அருகே சாலை விபத்தில் வடமாநில இளைஞர் பலி.

கந்தம்பாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் பலி.

Update: 2024-12-19 15:31 GMT
பரமத்தி வேலூர், டிச. 19: ஒடிசா மாநிலம் சுந்தர் பூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குத்தா மகன் பிரகாஷ் குத்தா (23). இவர் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பிரகாஷ் குத்தா நேற்று இரவு தான் வசிக்கும் இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கந்தம்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் புகலூர் அருகே உள்ள பூமாடபாளையம் சிவஜோதி மகன் மணிவேல்(35) ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை ஓட்டி வந்தபோது அவர் முன்னாடி சென்ற பள்ளிவாசல் கடக்க முயன்ற போது எதிரே வந்த பிரகாஷ் குத்தா மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரகாஷ் குத்தா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வித்து குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் இறந்து போன பிரகாஷ் குத்தாவின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News