விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம் நடராஜா நகர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.;

Update: 2026-02-01 13:17 GMT
குமாரபாளையம் நடராஜா நகர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜன. 21ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்த நிலையில்,,. நேற்று காலை 09:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இளம்பிள்ளை சிவசக்தி ஷண்முக சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

Similar News