முருகன் கோவில்கள் சார்பில் தைப்பூச தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் முருகன் கோவில்கள் சார்பில் தைப்பூச தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;
குமாரபாளையம் முருகன் கோவில்கள் சார்பில் தைப்பூச தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தைப்பூசம் நாளையொட்டி குமாரபாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாலசெல்வகுமரன் கோவில், கே.ஓ.என்.தியேட்டர் அருகே உள்ள மருதமலை முருகன் கோவில், உள்ளிட்ட கோவில்கள் சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து பெண்கள் மற்றும் ஆண்கள் மஞ்சள் ஆடையுடன் தீர்த்தகுடங்கள் எடுத்து வர, முருக பக்தர்கள் பலர் காவடி ஆடியவாறு ஊர்வலத்தில் வந்தனர். தேவாங்கர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில், இதில் பக்தர்கள் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் கோவில், வட்டமலை முருகன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் முருகன் கோயில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.